வாட்ஸ்அப் பேவைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு பயனர்களின் சட்டப்பூர்வ பெயரைக் காண்பிக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தும் பயனர்களின் சட்டப்பூர்வ பெயரைக் காண்பிக்க உள்ளோம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிவித்தது. வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பயனர்களின் பெயர்களை காண்பிக்க முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப். பொதுமக்கள் தங்கள் UPI இயங்குதளங்களில் சில சமயங்களில் வெவ்வேறு பெயர்கள் அல்லது புனைப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், UPI இயங்குதளங்களில் நடக்கும் மோசடி நடைமுறைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வாட்ஸ்அப் இந்த மாற்றத்தை செய்துள்ளது.

How-to set-up, make payments and receive money using UPI-based WhatsApp Pay  | Business Standard News

“UPI மூலம் உங்கள் வங்கிக் கணக்கை அடையாளம் காண உங்கள் கணக்குடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணை வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது. உங்கள் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய பெயரே இனி பகிரப்படும்” என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. உங்கள் சட்டப்பூர்வ பெயர், உங்கள் வங்கிக் கணக்கைப் போன்றே, நீங்கள் பணம் அனுப்புபவருக்கு அல்லது வாட்ஸ்அப்பின் UPI அடிப்படையிலான தளத்தில் பணம் பெறுபவருக்குத் தெரியும்.

WhatsApp Adds New Payments Feature In India And You May Not Be Able To  Guess What It Is

முன்னதாக, பயனர்கள் தங்கள் சுயவிவரத்திற்கு எந்த பெயரையும் தேர்வு செய்ய வாட்ஸ்அப் உதவுகிறது. இது அவர்களின் அதிகாரப்பூர்வ பெயராக இருக்க வேண்டியதில்லை. பயனர்கள் தங்கள் புனைப்பெயரைப் பயன்படுத்தலாம் அல்லது வாட்ஸ்அப்பில் தங்கள் பெயருக்கு அடுத்ததாக இமோஜிகளைச் சேர்க்கலாம். ஆனால் இனி அவை ஒரே மாதிரியாக இருக்காது. பயனர்கள் தங்கள் சுயவிவரப் பெயரை மாற்றும்படி கேட்கப்படவில்லை என்றாலும், வாட்ஸ்அப்பின் கட்டணச் சேவை அவர்கள் வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சத்தைத் தேர்வுசெய்யும்போது அவர்களின் வங்கிக் கணக்குகளின்படி மட்டுமே பெயர்களைக் காண்பிக்கும்.

Facebook launches WhatsApp-based digital payments service in Brazil |  Financial Times

கட்டணச் சேவைகளைப் பொறுத்த வரையில், வாட்ஸ்அப் தனது வாட்ஸ்அப் பே பேமெண்ட் சேவையை இந்தியாவில் 40 மில்லியன் பயனர்களுக்கு விரிவுபடுத்த இந்திய தேசிய கட்டணக் கழகம் (என்பிசிஐ) சமீபத்தில் ஒப்புதல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.