மும்பையை சேர்ந்த பெண் கணக்கு அதிகாரி ஒருவர் பான் கார்டை புதுப்பிக்குமாறு வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.1.80 லட்சத்தை இழந்துள்ளார்.

மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு அதிகாரியாக பணிபுரியும் 34 வயது பெண்ணிடம், பான் கார்டை புதுப்பிக்குமாறு லிங்க் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, சைபர் மோசடி செய்பவர் ரூ.1.80 லட்சம் மோசடி செய்துள்ளார். அவரது வங்கி விவரங்களை பெற்றுக்கொண்டு, அதன் பிறகு அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடியுள்ளார்.

மே 9 அன்று, தனது அலுவலகத்தில் இருந்தபோது, தனது தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தியைப் பெற்றுள்ளார் அந்த பெண் அதிகாரி. பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கும் இணைப்பைக் கொண்ட ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. லிங்கை உண்மையென நம்பி அந்தப் பெண் இணைப்பைக் கிளிக் செய்துள்ளார். இதன்பின் HDFC வங்கியின் போலி வலைப்பக்கம் திறக்கப்பட்டது. அவருடைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவுசெய்யுமாறு கேட்க, அதை பதிவிட்டுள்ளார் அந்த பெண்.

Pan Card Holder Alert! Get this work done now otherwise you may have to pay  a fine of up to Rs 10,000 - People News Chronicle

அவர் போனில் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெற்ற பிறகு, அவள் OTP மற்றும் அவளது பான் கார்டு விவரங்களையும் பதிவு செய்துள்ளார். விரைவில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.80 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. பணப் பரிமாற்றம் குறித்து தனது வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்ததையடுத்து, அந்த பெண் தனது வங்கியை அழைத்து தனது வங்கிக் கணக்கை பிளாக் செய்துள்ளார். பின்னர் புகார் அளிக்க சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தை அணுகினார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 419 மற்றும் 420ன் கீழ் ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும் ஏமாற்றியதற்காகவும் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 சி (அடையாளத் திருட்டு) மற்றும் 66 டி (கணினி வளத்தைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.