மே 21-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி  திட்டமிட்டுள்ளது.

மே 21 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

“குரூப் 2 தேர்விற்கு கடந்த முறையை விட கூடுதலாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த முறை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ளனர். குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-இல் நடைபெறும். குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கு காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் தேர்வெழுதும் மையத்திற்கு வர வேண்டும். காலை 8.59 வரை தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

TNPSC Group 2 exam date 2022 announced; check notification details here

79 ஆயிரத்து 942 பேர் தமிழ் வழியில் பயின்றதாக விண்ணப்பம் செய்துள்ளனர். பொது தமிழ் என்ற பாடத்தில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுத உள்ளனர். 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 7 மையங்களில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுத உள்ளனர். ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது” என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.