ரஷ்யா- உக்ரைன் இடையே தொடர்ந்து வரும் போரால், உக்ரைன் பெருமளவு பாதிக்கப்பட்டுவருகிறது. பாதுகாப்பு கருதி உக்ரைனை விட்டு அனைத்து நாட்டுத் தூதரகங்களும் அங்கிருந்து வெளியேறினார்கள்.

அந்த வகையில், மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியிருந்த 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களைத் இந்தியா மீட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, இந்தியத் தூதரகம் கடந்த மார்ச் 13-ம் தேதி தற்காலிகமாக உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் உள்ள வர்சா நகருக்கு மாற்றப்பட்டது.

உக்ரைன்

இந்த நிலையில், தற்போது இன்னும் போர் சூழல் முடிவுக்கு வராத சூழலில், மீண்டும் இந்தியத் தூதரகம் உக்ரைனின் தலைநகர் கீவில் வரும் மார்ச் 17-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.