15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி, மும்பை அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 56-வது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 8 தோல்வி, 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தநிலையில் ஆறுதல் வெற்றிபெறும் வகையில், நடப்பு தொடரில் மும்பை அணி கடந்த 2 போட்டிகளில் பலமிக்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளை வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்புடன் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதேபோல் சீசன் ஆரம்பித்த சமயத்தில் சிறப்பாக விளையாடிவந்த கொல்கத்தா அணி கடந்த சில போட்டிகளாக வெற்றிபெறமுடியாமல் தடுமாறி வருகிறது. கொல்கத்தா அணி 9-வது இடத்தில் உள்ளநிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் இன்று பேட்டிங்கில் களமிறங்கியது. கடந்த சில போட்டிகளாக துவக்க வீரராக பார்மில் இல்லாமல் இருந்த வெங்கடேஷ் ஐயர், கடந்த போட்டியில் நீக்கப்பட்ட நிலையில், இந்தப் போட்டியில், 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசி 24 பந்தில் 43 ரன்கன் எடுத்து தனது பார்மை நிரூபித்தார். அதேபோல், மற்றொரு துவக்க வீரரான ரஹானேவும் 3 பவுண்டரிகள் விளாசி 24 ரன்களில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

image

இதன்பிறகு களமிறங்கிய நிதிஷ் ராணா மட்டுமே 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் உள்பட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக பேட் கம்மின்ஸ், சுனில் நரைன் உள்பட கடைசி வரிசையில் இறங்கிய 4 வீரர்களும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். பும்ராவின் பந்துவீச்சில் அந்த அணியினர் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம்போல் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் டிம் சவுதி பந்துவீச்சில் ஜாக்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய திலக் ஷர்மாவும் 6 ரன்களில் ரஸல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால், 32 ரன்கள் எடுப்பதற்குள் மும்பை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் ராமன் தீப் சிங் ஆடி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.