56-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

70 சூப்பர் லீக் போட்டிகள் கொண்ட 15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், இதுவரை 55 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்று நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 56-வது போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. மும்பை இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 8 தோல்வி, 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.நடப்பு தொடரில் மும்பை கடந்த 2 போட்டிகளில் பலமிக்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளை வென்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் வெற்றிபெற மும்பை முனைப்பு காட்டும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அணியில் சிறப்பான வீரர்கள் இருந்தாலும், 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகளை பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கொல்கத்தா அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது.

image

மும்பை இந்தியன்ஸ்:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா (கேப்டன்), திலக் வர்மா, கெய்ரன் பொல்லார்ட், டிம் டேவிட், ராமன்தீப் சிங், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிலே மெரிடித்.

கொல்கத்தா அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்கிய ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ஷெல்டோன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், டிம் சௌதீ, பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.