செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம் பிடித்து நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது

செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம் பிடித்து நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ராக்கெட் லேப் என்ற நிறுவனத்தின் 59 அடி உயரமுள்ள ராக்கெட், 34 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்களை நிலைநிறுத்திய ராக்கெட், பாராசூட் வாயிலாக பூமிக்கு இறங்கியது. அப்போது நடுவானில் பூமியில் இருந்து 6 ஆயிரத்து 500 அடி உயரத்தில், அதை ஹெலிகாப்டர் வாயிலாக பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Rocket Lab CEO touts helicopter catch of rocket as key toward reusable goals

இதற்காக ஹெலிகாப்டர்களில் நீண்ட கொக்கி மாட்டப்பட்டு, திட்டமிட்டபடி அந்த ராக்கெட் பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பணி கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ராக்கெட் லேப் பொறியாளர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகமடைந்தனர். இருப்பினும் அதிக பாரத்தை ஹெலிகாப்டரால் தாங்க முடியாமல், ராக்கெட்டை கீழே விட்டதால், ராக்கெட் கடலில் விழுந்தது. ஒரே ராக்கெட்டை பல பயணங்களுக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கடலில் விழந்த ராக்கெட்டையும் அந்நிறுவனம் அப்படியே விட்டுவிடவில்லை. மீட்புக் கப்பலில் ராக்கெட்டை ஏற்றிக்கொண்டு ஆய்வகத்திற்கு கொண்டுவந்துவிட்டது. பின் அதன் நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, ராக்கெட்டை புதுப்பிக்க வேண்டுமா என முடிவு செய்யப்படும். ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்துவது சுற்றுப்பாதையை அடைவதற்கான செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்பதால் இஸ்ரோ உள்ளிட்ட பல விண்வெளி நிறுவனங்கள் இது குறித்த ஆய்வில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.