ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வருகிறார். அவர் ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை  வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை மறுத்த எலான் மஸ்க், தற்போது 41 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளார். 

image

இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகக் குழுவினர் மற்றும் எலான் மஸ்க் தரப்பினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாரத்திற்குள் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் தன்னுடைய ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை என்றும் பயனர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதற்கு நம்பிக்கையான ஒரு சமூக வலைத்தளத்தை கட்டமைக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்க விரும்புவதாகவும்  எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: `விண்வெளி குப்பைகளால் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து’- கடும் எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.