சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் 108 மெகா பிக்சல் கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளுடன் இன்று வெளியானது.

Samsung Galaxy M53 5G இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் நிறுவனத்தில் எம்- சீரிஸின் அடுத்த வரவாக இது அறிமுகமாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்52 மொபைலின் அடுத்த வெர்ஷனாக இது வெளியாகி உள்ளது. நீட்டிக்கப்படும் வசதி கொண்ட ரேம், 108 மெகா பிக்சல் கேமரா உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் வெளியாகி உள்ளது.

என்னென்ன வசதிகள்:

இரட்டை நானோ சிம் வசதி பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஆண்ட்ராய்டு – 12 அடிப்படையிலான One UI 4.1 இல் இயங்குகிறது. இது 6.7-இன்ச் முழு-HD+ (1,080×2,400 பிக்சல்கள்) Infinity-O Super AMOLED+ டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் மற்றும் கொரில்லா கிளாஸ் – 5 பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இந்த மொபைல் ஆக்டா-கோர் MediaTek Dimensity 900 SoC மூலம் இயக்கப்படுகிறது.

Samsung Galaxy M53 5G - Features & Specs | Samsung India

நீட்டிக்கும் வசதி கொண்ட ரேம்:

இந்த மொபைல் 6ஜிபி மற்றும் 8 ஜிபி என இரு வகைகளாக வெளிவந்துள்ளது. இந்த கைப்பேசியானது சாம்சங்கின் ‘ரேம் பிளஸ்’ அம்சத்துடன் வருகிறது. இது 8ஜிபி வரை பயன்படுத்தப்படாத சேமிப்பகத்தை மெய்நிகர் ரேமாகப் பயன்படுத்தும் வசதியை அளக்கிறது. ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

கேமரா எப்படி?

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஆனது குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா f/1.8 துளை லென்ஸுடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, f/2.2 துளை லென்ஸுடன் உள்ளது. , மற்றும் f/2.4 துளை லென்ஸ்கள் கொண்ட இரண்டு 2-மெகாபிக்சல் ஆழம் உடைய மேக்ரோ கேமராக்ளை கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு 32 மெகாபிக்சல் முன்புற கேமராவைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy M53 goes official: a budget A73 that keeps the 108MP camera  - GSMArena.com news

ஸ்டோரேஜ், பேட்டரி எவ்வளவு?

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஆனது 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பகத்தை வழங்குகிறது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக 1 டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கிக் கொள்ளலாம். 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 164.7×77.0x7.4mm அளவிலும்மற்றும் 176g எடையுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன விலை?

இந்தியாவில் Samsung Galaxy M53 5Gயின் ஆரம்ப விலை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ. 23,999, 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ. 25,999. இதன் விலையில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2,500 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 29 அன்று மதியம் 12 மணிக்கு அமேசான், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்வழியாக விற்பனைக்கு வரும். ஏற்கனவே சாம்சங் எம் – சீரிஸ் மொபைலை பயன்படுத்தும் பயனர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ரூ. 2,000 தள்ளுபடி வழங்கப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.