அண்மைக் காலங்களில் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில், மின்கலன்களுக்கான பரிசோதனை முறைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரம்பரிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, பேட்டரியில் இயங்கும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட இடங்களில் மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Chennai: Another electric scooter catches fire; third incident reported in  a week - Cities News

ஒலா, ஒகினாவா, ஜித்தேந்திரா எலெக்ட்ரிக், Pure EV ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை பரிசோதனை செய்யும் முறையில் மாற்றங்களை கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.