நாடக நடிகரிலிருந்து கன்னட திரைப்பட உலகின் ராக் ஸ்டாராக ஜொலிப்பது வரையிலான கேஜிஎஃப் ராக்கிபாய் “யாஷ்”-இன் பயணம் ஊக்கமளிக்கக் கூடியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட திரைப்படமான “கேஜிஎஃப் அத்தியாயம் 2” ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. கன்னட ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அதன் வெளியீட்டிற்கு முன்னதாகவே டிக்கெட்டுகளின் முன்பதிவு மிகப்பெரிய அளவில் காணப்பட்டது. இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் ரவீன் டாண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷின் ரசிகர்கள் ஆக்‌ஷன் நாடகத்தில் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தைப் பார்க்க ஆவலுடன் திரையரங்குகளுக்கு படைபெடுக்க, தற்போது வசூலில் இப்படம் சக்கைப் போடு போட்டு வருகிறது.

முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி சிறப்புக் காட்சிகளிலும் “ஹவுஸ் புல்லாக” ஓடிக் கொண்டிருக்கிறது கேஜிஎஃப்-2. படத்தின் நாயகனான யாஷ், கன்னடத் திரைப்படங்களில் நடித்ததற்காக முதலில் அறியப்பட்டவர். ஆனால் தற்போது அவருக்கு தென்னிந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. இருப்பினும், யாஷ் சினிமா தொழில்துறையில் ஒரு தாழ்மையான தொடக்கத்தைக் கொண்டிருந்தார், அவர் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடிப்பதற்காக பொழுதுபோக்கு உலகில் நுழைந்தார். நாடக நடிகராக இருந்து கன்னட திரையுலகின் ராக் ஸ்டாராக உயர்ந்த யாஷின் பயணம் மெச்சத்தக்கது.

எளிய குடும்பப் பின்னணி:

சினிமா ரசிகர்களுக்கு கேஜிஎஃப் நட்சத்திரத்தை “யாஷ்” என்று மட்டுமே தெரியும். ஆனால் அவரது உண்மையான பெயர் நவீன் குமார் கவுடா. ஜனவரி 8, 1986 அன்று, கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள புவனஹள்ளி கிராமத்தில் பிறந்த யாஷ், எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை அருண் குமார் கர்நாடக சாலை மற்றும் பெங்களூரு மெட்ரோ சாலைகளில் பேருந்து ஓட்டுநராக இருந்தார். அவரது தாயார் இல்லத்தரசி. யாஷுக்கு நந்தினி என்ற தங்கையும் உண்டு.

KGF Superstar Yash's Father is a Bus Driver Even Today

சின்னத்திரையில் துணை நடிகராக அறிமுகம்:

மைசூரில் தனது ஆரம்பக் கல்விக்குப் பிறகு, புகழ்பெற்ற நாடக ஆளுமை பி.வி. காரந்தின் புகழ்பெற்ற நாடகக் குழுவான பெனகா நாடகக் குழுவில் சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டில், ஈடிவி கன்னடத்தில் ஒளிபரப்பான நந்த் கோகுல் தொடரின் மூலம் யாஷ் தனது சின்னத்திரையில் அறிமுகமானார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றிய பிறகு, 2008 இல் வெளியான இயக்குனர் ஷஷாங்கின் மோகினி மன்சு திரைப்படத்தில் யாஷ் துணை வேடத்தில் நடித்தார். துணை நடிகர் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக “சிறந்த துணை நடிகருக்கான ஃப்ளிம்ஃபேர் விருது” யாஷிற்கு கிடைத்தது. அதன் பின்னர் சில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷ் நடித்து வந்தார்.

image

வெள்ளித்திரையில் அறிமுகம்:

யாஷ் தனது முதல் வெற்றிப் படமான “மொடலசாலா” 2010 இல் வெளியானது. படம் வெற்றி பெற்ற போதிலும் யாஷ் மக்கள் மத்தியில் கவனம் பெறவில்லை. ஆனால் 2011 ஆம் ஆண்டு வெளியான “ராஜ்தானி” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, மக்கள் அவரை அடையாளம் காணத் தொடங்கினர். அவரது அடுத்த படம் “கிராட்கா” வணிக ரீதியாக வெற்றி பெற்றது. யாஷ் கிராமத்து நகைச்சுவைத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டு வெளியான “கூக்லி” எனும் காதல்-நாடகத்தில் ஆற்றல் மிக்க இளம் தொழிலதிபர் ஷரத் என்ற பாத்திரத்தில் நடித்தார். அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த கன்னட படங்களில் ஒன்றாக இது வெற்றி பெற்றது.Mr. and Mrs. Ramachari tv premiere on Ganesha festival - Times of India

ராதிகா பண்டிட்டுக்கு ஜோடியாக அவரது அடுத்த படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி 2014 டிசம்பர் 25 அன்று திரையரங்கில் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களை வாரிக் குவித்த இந்த திரைப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த கன்னட திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. சிறந்த நடிகருக்கான ஃப்ளிம்பேர் மற்றும் சைமா விருதுகளை யாஷிற்கு தேடித் தந்தது இந்த திரைப்படம். 2015 இல், அவர் மாஸ்டர் பீஸில் நடித்தார். இது பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. 2016 ஆம் ஆண்டில், அவர் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டில் நடித்தார். இது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 30 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

சக நடிகையுடன் திருமணம்:

ராதிகா பண்டிட் நடித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி கன்னடத் திரையுலகில் யாஷிற்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. யாஷ் தனது சக நடிகையான ராதிகா பண்டிட்டை டிசம்பர் 9, 2016 அன்று திருமணம் செய்து கொண்டார். யாஷ் மற்றும் ராதிகாவுக்கு அதர்வா என்ற மகனும், ஆர்யா என்ற மகளும் உள்ளனர்.

Yash-Radhika Pandit wedding: Why Darshan skipped the star couple's marriage?  - IBTimes India

மக்கள் சேவையிலும் ராக்கிபாய்:

2017 ஆம் ஆண்டில், நடிகர் யாஷ் தனது மனைவி ராதிகா பண்டித்துடன் இணைந்து யாஷ் மார்க் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அமைப்பு கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பாடுபட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள ஏரிகளை சுத்தப்படுத்தி, தண்ணீர் பற்றாக்குறையால் வாடும் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக நடிகர் யாஷ் தனது அறக்கட்டளை மூலம் சுமார் நான்கு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

Yash Charitable Trust

பிரம்மாண்ட வெற்றி பெற்ற கேஜிஎஃப் 1:

கேஜிஎஃப் அத்தியாயம் 1 திரைப்படம், 2018 இல் கன்னடத்தில் வெளியிடப்பட்டது. பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. இது யாஷுக்கு வரலாறு காணாத வெற்றியைக் கொண்டுவந்தது. ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து, கன்னடத் துறையில் அதிக வசூல் செய்த படமாக இது உருவெடுத்தது. கன்னட ரசிகர்கள் மத்தியில் மட்டுமே அதுவரை வரவேற்பை பெற்ற யாஷிற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என மாநிலம் கடந்து பிரம்மாண்ட ஆதரவு எழுந்தது. படக்குழுவே வியக்கும் அளவுக்கு 4 மொழிகளிலும் வெற்றி பெற்ற முதல் பாகம், பேசுபொருளாக மாறி 2ஆம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

Prime Video: K.G.F: Chapter 1 (Hindi)

சொல்லியடித்த கேஜிஎஃப்-2:

திரையரங்குகளில் தான் கேஜிஎஃப் -2 படத்தை வெளியிடுவோம் என படக்குழு உறுதியாக இருந்ததால், வெளியீடு தாமதமாகி வந்தது. இந்நிலையில் ஒருவழியாக டீசர், ட்ரெய்லர், பாடல்களை முதற்கட்டமாக வெளியிட்டு ரசிகர்களை திரைப்பட வெளியீட்டிற்கு தயார்படுத்தியது படக்குழு. அவர்களின் இந்த முயற்சிகளுக்கு எல்லாம் கைமேல் பலன் கிடைத்துவிட்டது. தமிழகத்தில் ஒரு வேற்று மொழித் திரைப்படத்திற்கான இரவு 1 மணிக்காட்சிகள் “ஹவுஸ் புல்லாக” ஓடி புது வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறது கேஜிஎஃப்-2.

KGF 2 Day 5 Box Office Collection | KGF Chapter 2 Day 5 Collection  Worldwide | KGF 2 Worldwide Collections - Filmibeat

பீஸ்ட் படத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிக எண்ணிக்கை கொண்ட திரையரங்குகள் தற்போது கேஜிஎஃப் திரைப்படத்திற்காக வரிசையாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் வரும் நாட்களில் பெரும் வசூலை ஈட்டும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இந்திய அளவிலான வசூலில் ஆயிரம் கோடி என்ற சாதனையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது கேஜிஎஃப்-2. சீரியலில் துணைக் கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி இன்று யாஷ் வந்து நிற்கும் இடம் “ராக் ஸ்டார்”. அனைவருக்கும் நம்பிக்கையை அளிக்க வல்லது அவரது பின்னணி. அடுத்து கே.ஜி.எஃப் அத்தியாயம் 3-லும் யாஷ் தன் மிரட்டலை தொடர்வார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.