ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு மட்டும் கடந்தாண்டு, இந்திய ரூபாய் மதிப்பில் 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மெடா நிறுவனத்தின் ஆண்டு கணக்கு தாக்கல் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், தனி விமானம், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் என சுமார் 26 புள்ளி 8 மில்லியன் டாலர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு செலவிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகமாகும். இவை மட்டுமின்றி அவருக்கு ஊதியமாக ஓராண்டுக்கு ஒரு டாலர் கொடுக்கப்பட்டுள்ளது.

image

அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 76 ரூபாயாகும். இதே போன்று மெடா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவரான ஷெரில் சேன்ட்பெர்க்கின் பாதுகாப்பிற்கு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 83 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 5G அடிப்படை விலையை குறையுங்கள் – TRAI பரிந்துரை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.