நேற்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் இரண்டும் தலா 76 காசுகள் உயர்ந்து விற்பனை ஆகிறது.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 67 காசுக்கு விற்கப்படுகிறது. டீசலும் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த நான்கு நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 27 காசுகளும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 28 காசுகளும் அதிகரித்துள்ளன. கடந்த நான்கு நாட்களில் நேற்று மட்டும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது.

மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல் டீசல் விலை - அரசின் தவறான  வரிச்சுமை காரணமா? | explain reason behind petrol diesel price hike |  Puthiyathalaimurai - Tamil News | Latest ...

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட துவங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.