இந்தக் கோவிட் வந்தாலும் வந்துச்சு, புது ஃபோன் வாங்க நினைச்சவங்களுக்கு எல்லாம் கஷ்டமா போச்சுங்க… காரணம், உலகளாவிய சிப் செட் தட்டுப்பாடு, அதனால் ஏற்பட்ட ஸ்மார்ட் ஃபோன் விலையேற்றம். ஆனால் இப்போ Redmi Note 11 Pro Series ரூ. 20,000-க்குள்ள இந்தியாவில் லான்ச் ஆகப் போகுதுங்குற அதிரடி அறிவிப்பு டெக் லவ்வர்ஸை குஷியில் ஆழ்த்தியிருக்கு!

Redmi Note Series பத்தி ஊருக்குள்ள கேட்டுப்பாருங்க. ஒவ்வொரு முறை ரிலீஸ் ஆகும்போதும் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டு புக்கிங் சைட்டே கிராஷ் ஆகுற அளவுக்கு சேல்ஸ் இருக்கும்! இதுவரை உலகளவில் 240 மில்லியன் ஃபோன்கள் வித்திருக்கு, இந்தியாவில் மட்டும் 67 மில்லியனாம்ணே!

மிட் ரேஞ் செக்மென்ட்டில், ஹையர் ரேஞ் ஃபோனில் கிடைக்கும் அம்சங்கள் இருந்தா யாருதான் போட்டி போட்டு வாங்காம இருப்பாங்க? அதுதான் Redmi Note Series-ன் சக்ஸஸ். இந்தப் புது Redmi Note 11 Pro Series-லும் 108MP கேமரா, 120Hz சூப்பர் ஆமோலெட் டிஸ்பிளே & புரோ கிரேடு 67 வாட்ஸ் டர்போ சார்ஜிங், ஏழு 5ஜி பேண்ட் சப்போர்ட்னு எக்ஸ்பெக்டேஷன்ஸை எகிற விட்டிருக்காங்க ரெட்மி!

இந்த ஃபீச்சர்ஸ் எல்லாமே ரூ. 20,000-க்கு கிடைக்கப்போறதால, மீண்டும் இந்த மிட் ரேஞ் செக்மென்டை Redmi Note 11 Pro Series-தான் ஆளப்போது உலகமெல்லாமே!

ஷ்ஷ்ஷ்… யார்ட்டையும் சொல்லிறாதீங்க… நம்ம இன்ஃபார்மர்ஸ் நமக்கு கொடுத்துருக்குற தகவல்படி ஜியோமியின் Redmi Note 11 Pro Series லான்ச் சும்மா வேற லெவல்ல இருக்கப்போதாம்! ‘2022-ன் மிகப்பெரிய அறிவிப்பாக இதுதாங் கண்ணு இருக்கோணும்!’னு சுறுசுறுப்பா தயார் ஆயிட்டு வருது ஜியோமி நிறுவனம்!

எப்போ லான்ச்னா கேக்குறீங்க? மார்ச் 9, 2022, மதியம் 12 மணிக்கு Redmi Note 11 Pro Series-ன் மெகா லைவ் லான்ச் ஈவென்ட் நடக்கப் போகுது! வி ஆர் வெயிட்டிங்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.