“மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இனியும் புகழ வேண்டாம்” என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நாள் முதலாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை டொனால்டு டிரம்ப் புகழ்ந்து பேசி வருகிறார். உதாரணமாக, உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக தன்னிச்சையாக அறிவித்த புடினின் நடவடிக்கை புத்திசாலித்தனமானது என டிரம்ப் புகழ்ந்திருந்தார்.

image

அதேபோல, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி உக்ரைன் மீது போர் தொடுத்த புடினின் துணிச்சலை பாராட்ட வேண்டும் என்றும் அவர் மற்றொரு சமயத்தில் கூறியிருந்தார். இவ்வாறு விளாடிமிர் புடினை டிரம்ப் புகழ்வது அமெரிக்காவில் பெரும் விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் வித்திட்டுள்ளது.

Trump praises Putin's 'genius' as GOP fissures grow on Ukraine crisis

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது, துணை அதிபராக பணியாற்றியவரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான மைக் பென்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், “உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஆகும். எந்தக் காரணத்தை கொண்டும் ரஷ்யாவின் நடவடிக்கையை நாம் நியாப்படுத்த முடியாது. இப்படி ஒரு மோசமான போரினை நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை புகழ்வதை டொனால்டு டிரம்ப் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். புடினை பாராட்டுபவர்களுக்கு கட்சியில் இடம் கிடையாது” என பென்ஸ் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.