பின்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நோக்கியா நிறுவனம் தனது ‘பியூர்புக் புரோ லேப்டாப்’-பை இரண்டு வேரியண்டுகளாக அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 17.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் என இரண்டு விதமான ஸ்க்ரீன் சைஸ்களில் இந்த லேப்டாப் சந்தைக்கு வர உள்ளது. 

image

GSM Arena கொடுத்துள்ள தகவலின் படி இந்த லேப்டாப்பை பிரெஞ்சு நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஆஃப் குளோபல்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. நோக்கியா நிறுவனத்துடன் அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி இந்த லேப்டாப் உலகம் முழுவதும் சுமார் 22 நாடுகளில் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

அலுமினியம் டாப் கவர், ரவுண்ட்டட் எட்ஜஸ், பெரிய டிரேக்பேட் (லேப்டாப் மவுஸ்), பேக்லிட் கீபோர்டு, இன்டல் கோர் i3-1220P, 8ஜிபி ரேம், 512ஜிபி SSD, 17.3 இன்ச் லேப்டாப்பில் 63Wh பேட்டரி மற்றும் 15.6 இன்ச் சாதனத்தில் 57Wh பேட்டரி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது. 

இந்த லேப்டாப் நான்கு வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இந்த மிட்-ரேஞ்ச் விலை கொண்ட லேப்டாப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.