Made with Flourish

புதுக்கோட்டை நகராட்சி: விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி!

விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சியில், 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிட்ட பர்வேஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னை 23-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

சென்னை 23-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர்கள் 19 பேரும், அதிமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

சுயேச்சை வேட்பாளர்

இந்த நிலையில், சென்னை 23-வது வார்டில் தீப்பெட்டி சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜன் என்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

`உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது’

கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் வெற்றி பெறும் வேட்பாளர்களின் சான்றிதழில் இந்த முடிவுகள் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருபாலினி

கோவை மாநகராட்சி 7 வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி. அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி.

18 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை! 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில், அதில் 18 மாநகராட்சிகளின் முன்னணி நிலவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த 18 மாநகராட்சிகளிலும் திமுக வே முன்னிலையில் இருக்கிறது.

சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது. ஆவடி மாநகராட்சியில் திமுக, அதிமுக தலா ஒரு இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

அதிமுக-வை வீழ்த்திய பாஜக வேட்பாளர்!

நெல்லை பணகுடி பேரூராட்சியின் நான்காவது வார்டில் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் அதிமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் தலா 266 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்ததால் குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது.

மாநகராட்சிகளில் திமுக முன்னிலை! 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

சென்னை, வேலூர், ஈரோடு மாநகராட்சிகளில் திமுக ஆரம்பம் முதலே முன்னிலை எடுத்திருக்கிறது. இதுவரை 9 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது

கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டு சாவி தொலைந்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு அறை திறக்கப்பட்டது.

இராமநாதபுரத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை….இடம்: விழுப்புரம்

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 -ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் எண்ணும் பணி தொடங்கியது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: 

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 -ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2022

உள்ளாட்சி உய்யலாலா!

மொத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:

மாநகராட்சி – 21

நகராட்சி – 138

பேரூராட்சி – 490.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் 60.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தாலும், மாநகரப் பகுதிகளில் மந்தமாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னையில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பதிவானது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து 268 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.