2022 ஜனவரியில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) மதிப்பு 61.41 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 36.76 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும், ஜனவரி 2020-ஐ விட 38.90 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது.

ஜனவரி 2022-ல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 67.76 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 30.54 சதவீத மெதுவான வளர்ச்சியையும், ஜனவரி 2020-ஐ விட 30.19 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது.

ஏப்ரல்-ஜனவரி 2021-22-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகயின் மதிப்பு (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) 545.71 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 37.68 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் ஏப்ரல்-ஜனவரி 2019-20 விட 23.29 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது  காட்டுகிறது/

ஏப்ரல்-ஜனவரி 2021-22-ல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 616.91 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 54.35 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும், ஏப்ரல்-ஜனவரி 2019-20-ஐ விட 20.15 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

Source: PIB

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.