தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். வானளாவி வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பரவிப் பின்னிக்கொண்டிருந்த வனப் பிரதேசத்தின் மத்தியில் அழகான சிற்ப வீடு ஒன்று காணப்பட்டது. மனோகரமான காலை நேரம், சூரியோதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் உச்சியில் வஸந்த காலத்தில் இளந்தென்றல் உலாவியபோது ‘சலசல’வென்று இலைகள் அசையும் இனிய ஓசை எழுந்தது. பட்சி ஜாலங்களின் கண்டங்களிலிருந்து விதவிதமான சுருதி பேதங்களுடன் மதுர மதுரமான அமுத கீதங்கள் பெருகிக் கொண்டிருந்தன. வீட்டைச் சுற்றியிருந்த மரங்களின் அடியில் ஆங்காங்கே பெரிய பெரிய கருங்கற்கள் கிடந்தன. அந்தக் கருங்கற்களில், தனித்தனியாகவும் இருவர் மூவராகவும் இளம் சிற்பிகள் அமர்ந்து கையில் கல்லுளியுடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இளம் சிற்பிகள் கருங்கற்களில் கல்லுளியினால் வேலை செய்த போது உண்டான ‘கல்கல்’ என்ற ஓசை, இலைகள் அசையும் ஓசையுடனும் பட்சிகளின் மதுரகானத்துடனும் கலந்து, செவி கொடுத்துக் கேட்பவர்களுக்கெல்லாம் நாத போதையை உண்டாக்கிற்று. இத்தகைய கீதப் பிரவாகத்துக்கிடையே, திடீரென்று வீட்டிற்குள்ளிருந்து ‘ஜல்ஜல்’ என்ற சத்தம் வந்தது… முழுமையாகக் கேட்க

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.