உலக அளவில் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் போட்டோ ஷேரிங் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பயனர்கள் 60 நொடிகள் கொண்ட வீடியோ ஸ்டோரிகளை போஸ்ட் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகும் என சொல்லப்படுகிறது. 

image

தற்போது பயனர்கள் அதிகப்பட்சம் 15 நொடிகள் மட்டுமே வீடியோ ஸ்டோரிகளை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல் டைம் டியூரேஷன் கொண்ட வீடியோக்கள் ஸ்பிளிட்டாகி மற்றொரு ஸ்டோரியாக அப்லோடாகும். 

இந்த புதிய அம்சம் தொடர்பாக துருக்கி நாட்டை சேர்ந்த இன்ஸ்டா பயனர் ஒருவர் உட்பட சில குறிப்பிட்ட பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு வருவதாக 9to5Mac என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு வீடியோ ஸ்டோரிகளை போஸ்ட் செய்வதை மேலும் சுலபமாக மாற்றுவதற்கான பணியை இன்ஸ்டா மேற்கொண்டு வருகிறதாம். அதன்படி லோகேஷன் மற்றும் சக பயனர்களை மென்ஷன் செய்வது சுலபமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்மையில் இன்ஸ்டாகிராம் தளத்தை 2 பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.