குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்றரை மணிநேர போராட்டத்திற்குப்பிறகு தீ அணைக்கப்பட்டது. 

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக உயரிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட, ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ – 17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். தலைமை ஜெனரல் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டிருக்கிறது.

image

இந்த விபத்தானது மதியம் 12.20 மணிக்கு, அதாவது வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு 10 கி.மீ தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தது. மிகுந்த போராட்டத்திற்குப்பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – உயிரிழப்பு 7ஆக உயர்வு 

ராணுவ போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணிக்கமுடியும். மேலும், மோசமான வானிலையையும் சமாளித்து பறக்கக்கூடிய திறன் வாய்ந்தது இந்த ஹெலிகாப்டர். ஹெலிகாப்டரின் எரிபொருள் கொள்ளளவும் அதிகம். ஒருவேளை தொழில்நுட்ப கோளாறால் விபத்து நிகழ்ந்திருந்தால் எரிபொருள் முழுவதுமாக எரிந்திருக்கலாம் என்றும், இதனால் தீயை அணைப்பது சிரமமாக இருந்திருக்கலாம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.