பள்ளி, கல்லூரிகள் அருகில் கஞ்சா, குட்கா விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுங்கள் என்று மாவட்ட எஸ்பிக்கள், காவல் ஆணையர்கள், ரயில்வே காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, அனைத்து மண்டல போலீஸ் ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், ரயில்வே போலீஸ் டிஜிபி, அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் ஆகியோருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

image

அதில், “பள்ளிகள் மற்றும் கல்லூரி அருகே கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் டிசம்பர் 6 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி வரை ஒரு மாத காலம் ‘கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை’ நடத்த வேண்டும். கஞ்சா, குட்கா லாட்டரி விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் பதுக்கல் விற்பனை சங்கிலியை உடைக்க, மொத்த கொள்முதல் விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, குட்கா, லாட்டரி பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு, மனநல ஆலோசகர்கள் மூலம், அவர்களை இந்த பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை வைத்து காவல் ஆய்வாளர் வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்க வேண்டும். இவர்கள் மூலம் ரகசியத் தகவல்களை சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிர்களை ஒழிக்க, ஆந்திர போலீசாருடன் இணைந்து விசேஷ கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

ரயில்வே காவல்துறையினர், ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கஞ்சா, குட்கா, லாட்டரி கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  கஞ்சா, குட்கா, லாட்டரி சோதனை இந்த ஒரு மாதத்துடன் நின்றுவிடாமல், போலீஸ் ஸ்டேஷன் ஐஎஸ் ஏட்டுகளுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை அளித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று டிஜிபி  சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம் : இந்திய கிரிக்கெட் அணியின் ‌தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணமும் சில கேள்விகளும்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.