உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கோவை ஓசூர் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான வேலுமணி மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Also Read: பன்னீரின் வேலுமணி பாசம் முதல் அன்வருக்கு தூதுவிட்ட ராஜகண்ணப்பன் வரை… கழுகார் அப்டேட்ஸ்

திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள் 9-ம் தேதி கோவையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய வேலுமணி , “திமுக அமைச்சர்கள் கூடும் இடத்தில் காவல்துறை வழக்கு போடுவதில்லை. ஸ்டாலின் வந்தபோதும் வழக்கு போடவில்லை. ஆனால், அம்மா நினைவு நாளில் ஊர்வலம் சென்றதற்காக எங்கள் மீது வழக்கு போட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் திமுக எதையும் செய்யவில்லை. 300-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்துள்ளனர்.

வேலுமணி

இந்த ஆர்ப்பாட்டம், காவல்துறைக்கு நமது சக்தியை நிரூபிக்கும். கூட்டத்தை அழைத்துவர எல்லாருக்கும் கடமை இருக்கிறது. தமிழகத்திலேயே சிறப்பான கூட்டம் இதுவாக இருக்க வேண்டும். இதைப் பார்த்து கோட்டை நடுங்க வேண்டும்.

தொட்டதெற்கெல்லாம் காவல்துறை எங்கள் தொண்டர்கள் மீது வழக்கு போட்டால், நாங்களும் எதிர்வினையாற்ற தயார். எங்களை சீண்ட வேண்டாம் என்று சொல்கிறோம். எங்ளை மிரட்ட வேண்டாம். நாங்கள் கமிஷனர், எஸ்.பி அலுவலகத்தில் வந்து அமர்ந்தால் வேறு மாதிரி பிரச்னையாகும். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

கோவை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க ஸ்டாலின் வந்தபோது, கோவை காவல்துறை எப்படி இருந்ததோ, அப்படித்தான் எங்களிடமும் நடந்து கொள்ள வேண்டும். கோவை மாநகராட்சியை நாம்தான் கைப்பற்ற போகிறோம்.

வெறும் விளம்பரத்தில் மட்டும்தான் இந்தாட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு லட்சம் பேர் வரவேண்டும். மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் வந்தாலே 35,640 பேர் வந்துவிடலாம். எங்கிருந்து, எத்தனை பேர் வருகின்றனர் என்பதை கண்காணிக்க ஒரு டீம் போடப்பட்டுள்ளது.

கோவை

இந்த ஆர்ப்பாட்டம் நம் வீட்டு நிகழ்ச்சி. இங்கிருக்கும் காவல்துறை, அதிகாரிகளுக்கு நம் சக்தியை நிரூபிக்க வேண்டும். சென்னையில் நாங்கள் எடுத்த வேலைகளை, இவர்கள் முழுமையாக செய்யவில்லை. அதை செய்யாமல் எங்கள் மீது பழிபோடுகின்றனர்.” என்றார்.

முக்கிய நிர்வாகிகள் மட்டுமே மேடையில் அமர வேண்டும் என்று அறிவித்துவிட்டனர். இதனிடையே, அதிமுக கோவை வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை இணை செயலாளர் சோனாலி பிரதீப், வேலுமணி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தன் ஆதரவாளர்கள் மூலம் மேடையில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

சோனாலி பிரதீப்
வேலுமணி
சோனாலி பிரதீப்
சோனாலி பிரதீப்

இதனால் மற்ற மகளிர் நிர்வாகிகள், ஆண்கள் அவரை கீழே இறங்கும்படி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். பல முக்கிய நிர்வாகிகள் கூறியும், சோனாலி கடைசிவரை இறங்கவில்லை.

கூட்டத்தில் பேசிய பலரும், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் காவல்துறை மீது பயங்கரமாக கடிந்து கொண்டனர். பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ பேசுகையில், “பத்து அமாவாசைக்குள் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். அதிமுக மீண்டும் அரியணை ஏறும். நாங்கள் சிலிர்த்தெழுந்தால் எதிரிகள் தாங்க மாட்டார்கள். எந்த ஊரில் இருந்து எலி, பெருக்கான் வந்தாலும் கவலையில்லை.

வேலுமணி பொள்ளாச்சி ஜெயராமன்

எங்களுக்கு வேலுமணி ஒருவர் போதும்.” என்றார். கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏவுமான பி.ஆர்.ஜி அருண்குமார் மிகவும் கொதித்து அதிகாரிகளை ஒருமையில் திட்டினார்.

“இந்த அதிகாரிகள் எல்லாம் கொத்தடிமையாக இருக்கின்றனர். அதிகாரிகள் திமிறு பிடித்து நடந்து கொள்கின்றனர். ஆட்டம் அதிகமாக இருக்கிறது. ஏதோ இங்கேயே நிலையாக இருப்பது போலவும், திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் நாட்டை பட்டா போட்டு கொடுத்தது போல நினைக்கின்றனர். நாங்கள் இழிச்சவாயன்கள் இல்லை.” என்று பேசினார். அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும்,

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் அர்ச்சுனன், “11 ஆண்டுகள் கழித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். நம் ஆட்டைத்தைக் கண்டு காவல்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.