சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட 1022 ஏரிகளில் 962 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன.

தொடர் கனமழை காரணமாக, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகள் கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள 344 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 506 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், சென்னையில் 16 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.

காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த 2 தினங்களாக தொடர்ச்சியாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிறைந்த மாவட்டங்கள் அனைத்திலும் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

image

தற்போதைக்கு ஏரிகள் அனைத்தும் நிரம்பிவருகின்றன. அந்தவகையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் நிலவரம்:

* காஞ்சிபுரம் மாவட்டம் மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 381 ஏரிகளில் 344 ஏரிகள் 100 சதவிகிதமும், 37 ஏரிகள் 75 சதவிகிதமும் நிரம்பியுள்ளன

* செங்கல்பட்டு மாவட்டம மொத்த ஏரிகள் எண்ணிக்கை 528 ஏரிகளில் 506 ஏரிகள் 100 சதவிகிதமும், 22 ஏரிகள் 75 சதவிகிதம் நிரம்பியுள்ளன.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்த ஏரிகளில் எண்ணிக்கையை 93 ஏரிகளில் – 93 ஏரிகளும் 100% நிரம்பியுள்ளன

* சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த ஏரிகள் எண்ணிக்கை 16. இந்த 16 ஏரிகளும் 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளன

இப்படியாக பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் தற்போது 962 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 59 ஏரிகள் 75 சதவிகிதமும், 2 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.

– பிரசன்னா 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.