கர்நாடக மாநிலத்தில் வெவ்வேறு துறைகளை சார்ந்த 15 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 68-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம், அசையும் மற்றும் அசையா சொத்துகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடம், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இடம் என பெங்களூரு, மங்களூரரு, மாண்டியா மற்றும் பல மாவட்டங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையை 8 எஸ்.பி, 100 அதிகாரிகள் மற்றும் 300 ஊழியர்கள் என ஊழல் தடுப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர். 

விவசாயம், கூட்டுறவு, பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி, பொதுப்பணித்துறை, பத்திரப் பதிவுத்துறை, வட்டார வளர்ச்சித் துறை என பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. 

இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் எவ்வளவு மதிப்பிலான ரூபாய் மற்றும் சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஊழல் தடுப்பு படையினர் வெளியிடாமல் உள்ளனர். 


இத்தகைய சூழலில் குல்பர்காவில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஒருவரது இல்லத்தின் PVC பைப்புக்குள் இருந்து கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் எடுப்பது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் மட்டும் சுமார் 13 லட்ச ரூபாய் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.