நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை  இதுவரை குறைத்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அரசு தரப்பு தகவலில், “பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை கணிசமாகக் குறைப்பதற்காக நவம்பர் 3, 2021 அன்று மத்திய அரசு எடுத்த முடிவைப் பின்பற்றி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 மத்திய அரசு குறைத்த போதுநுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைப்பு: பல மாநிலங்களும் வாட் வரியை குறைத்தது

image

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பின்வருமாறு: மகாராஷ்டிரா, டெல்லிமேற்கு வங்காளம்தமிழ்நாடுதெலங்கானாஆந்திராகேரளாஜார்கண்ட்சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான். வாட் குறைப்பை தொடர்ந்துபெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் புதுச்சேரிகர்நாடகா உள்ளிட்ட 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கணிசமாக குறைந்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.