உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்றால் மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருக்கும். கணினி, ஸ்மார்ட்போன், வாட்ச் என ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் நீண்டு கொண்டே போகிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான நிறுவனம். 

image

1976-இல் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களான ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியாக் தங்கள் கைப்பட வடிவமைத்த தங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ஆப்பிள் – 1 கணினி தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. அப்போது சுமார் 200 கணினிகளை அவர்கள் உருவாக்கி விற்பனை செய்திருந்தனர். அதில் ஒன்று தான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. 

முழுமையான கணினியாக இல்லாமல் மதர் போர்ட், CPU, ரேம் மற்றும் டெக்ஷூவல் வீடியோ சிப்கள் மாதிரியானவற்றை மட்டும் தான் அப்போது ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கீபோர்ட் மற்றும் மானிட்டர் மாதிரியானவை எல்லாம் வாங்கியவர்கள் அசெம்பிள் செய்துள்ளனர். 

அப்படி அசெம்பிள் செய்யப்பட்ட ஆப்பிள் -1 கணினியை கடந்த 1977-இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள Chaffey College பேராசிரியர் இடமிருந்து வாங்கி உள்ளார் அவரது மாணவர் ஒருவர். அப்போது அதனை 650 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். 


தற்போது அதை ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளார் அந்த மாணவர். எப்படியும் சுமார் 6 லட்சம் அமெரிக்க டாலர்களை அவர் பெறுவார் என தெரிகிறது. இந்திய மதிப்பில் 4.4 கோடி ரூபாய். இப்போதும் இயங்கும் இந்த கணினி, பானாசோனிக் வீடியோ மானிட்டர் உடன் ஏலத்திற்கு வந்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.