பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்குயிட் (Pesquet), சுமார் 200 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில், அவர் தனது பணிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுகிறார். அதற்கு முன்னதாக விண்வெளியில் இருந்த படி பூமிக்க கோளின் அழகை பார்த்து ரசித்த அவர், அதை அப்படியே டைம் லேப்ஸ் வீடியோவாக ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“மாயாஜால மிக்க இந்த காட்சியுடன் இன்னும் ஒரு இரவு. அதை தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை? நிச்சயம் நான் எங்கள் விண்கலத்தை மிஸ் செய்வேன்” என தெரிவித்துள்ளார் அவர்.
அதோடு சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பிரத்யேக படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.