“இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருள்களுக்கு நாம் முக்கியத்துவ அளிக்க வேண்டும்” – மோடி

மோடி, “இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் நல்ல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்று, இந்திய நிறுவனங்களுக்கு முதலீடு வருவது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

தொற்றுநோய்க்கு எதிரான நமது முதல் பாதுகாப்பு பொது மக்களின் பங்கேற்பாகும், இதன் ஒரு பகுதியாக மக்கள் விளக்குகளை ஏற்றினார்கள், கை தட்டி ஒலி எழுப்பினார்கள். “நோயிலிருந்து விடுபட இது நமக்கு உதவுமா” என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்…?. ஆனால் அவை மருத்துவ பணியாளர்களுக்கு உற்சாகத்தை வழங்கியது.

நாம் எங்கு பார்த்தாலும் இப்போது நம்பிக்கை மட்டுமே உள்ளது …. முன்பு இந்த நாட்டில், அந்த நாட்டில் உருவாக்கப்பட்ட என்ற வரிகள் மட்டுமே இருந்தன, ஆனால் இன்று அனைவரும் ‘மேட் இன் இந்தியா’ பற்றி பேசுகிறார்கள். இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருள்களுக்கு நாம் முக்கியத்துவ அளிக்க வேண்டும். போரின் போது கவசங்களை அணிவதை போன்று மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்றார்.

“நமது தடுப்பூசி திட்டத்தில் அச்சங்கள் இருந்தன..”

பிரதமர் மோடி, “நமது தடுப்பூசி திட்டத்தில் அச்சங்கள் இருந்தன. இங்கு அது எவ்வாறு செயல்படும் என்று இந்தியாவைப் பற்றியும் பேசப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மக்களின் உயிர்களை பாதுகாத்தது. இனியும் மக்களை பாதுகாக்கும். இந்தியாவின் முழு தடுப்பூசி திட்டமும் ‘அறிவியல் சார்ந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலானது’ என்ற உண்மையைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். இது முற்றிலும் அறிவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை மக்கள் வாங்குவதில் ஆர்வத்தினர் வளர்த்திருக்கிறோம்” என்றார்.

“முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம்”

பிரதமர் மோடி, “அக்டோபர் 21 அன்று, இந்தியா 1 பில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைந்தது. இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது. இந்த சாதனைக்காக ஒவ்வொரு குடிமகனையும் வாழ்த்துகிறேன். 100 கோடி தடுப்பூசிகள் வெறும் எண் அல்ல, நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். தடுப்பூசி செலுத்த தொடங்கிய பொழுது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தின் மூலம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்தது” என்றார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை!

மோடி

இந்தியாவில் மெகா கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் 100 கோடி டோஸ் என்கிற இமாலைய இலக்கை எட்டியுள்ளது. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றைய உரையில் வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.