கோடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் மரண வழக்கின் மேல் விசாரணையை சேலம் காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் விசாரணை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் என்பவர் அதை மறுத்து, கனகராஜ் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு விபத்து என மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

image

இதையடுத்து கனகராஜ் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க சேலம் நீதிமன்றம் மூலம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாகவும், வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடத்தவுள்ளதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார்.

கனகராஜ் சகோதரர் தனபால், மனைவி, உறவினர்களிடம் கோடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அவர்களிடம் ஏதாவது புதிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், கனகராஜ் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க காவல்துறை முடிவு செய்து, தற்போது விசாரணையை தொடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.