கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

விஜய் வசந்த்க்கு நேற்றிரவு வாட்ஸ்அப் மூலம் வந்த செய்தியில், சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் செய்த உண்மைக்கு புறம்பான பதிவை நீக்குவதற்கு வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் அதற்காக ஓ டி பி என்னை கூற வேண்டுமென ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை அணுகிய போது, விஜய் வசந்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதுதவிர அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.

Exclusive: ஒரு பக்கம் பிரதமர்.. மற்றொரு பக்கம் ராகுல்.. பற்றிய பதற்றம்..  விவரிக்கும் விஜய் வசந்த் MP | Vijay Vasanth Mp Shares his first day  Parliament experience - Tamil Oneindia

சைபர் கிரைம் காவல் துறையில் இதுகுறித்து புகார் அளிக்க உள்ள நிலையில், தனது சமூகவலைதள பக்கங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என விஜய் வசந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.