20 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்திய ஸ்காட்லாந்து அணி, இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஓமனில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் பெரிங்டன் 70 ரன்களும், மேத்யூவ் கிராஸ் 45 ரன்களும் எடுத்தனர். கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்களில் ஆட்டமிழந்தது.

SCO vs PNG Highlights T20 World Cup 2021: Scotland beat Papua New Guinea by  17 runs | Cricket News – India TV

இதனால் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்த ஸ்காட்லாந்து அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.