கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஆகிய, புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் வருகிற 28ஆம் தேதி அமெரிக்க சந்தைகளில் விற்பனைக்கு வர உள்ளன.

பிக்சல் 6 ஃபோன் 599 அமெரிக்க டாலருக்கும், டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன்பக்க கேராவைக் கொண்ட கூகுள் 6 ப்ரோ ஃபோன் 899 அமெரிக்க டாலருக்கும் விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரண்டு ஸ்மார்ட் ஃபோன்களும், கூகுள் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான ‘டென்சார்’ எனும் சிப் மூலம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pixel 6, Pixel 6 Pro With Google’s Custom-Built Tensor SoC, Android 12 Launched: Price, Specifications

அதோடு, ‘பிக்சல் பாஸ்’ எனும் பெயரில், மாதத்திற்கு 45 அமெரிக்க டாலர் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில், புதிய சந்தா சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இந்த சேவையின் மூலம், பிக்சல் 6 ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் யூடியூப் மற்றும் யூடியூப் மியூசிக் செயலிகளின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.