சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் ஓமனில் தொடங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பப்புவா நியூ கினி மற்றும் ஓமன் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்தது.
130 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது ஓமன். 13.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 131 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்து அசத்தலான வெற்றியை ஓமன் பதிவு செய்துள்ளது. ஓமன் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரை சதம் பதிவு செய்திருந்தனர்.
இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் 23-ஆம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.