கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளர் ஆகிவிட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நீதிமன்றம் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறியுள்ளது. இன்று சசிகலா செய்துள்ளது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. மீசை வைத்தவரெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிடமுடியாது. சசிகலா என்ன தியாகம் செய்தார் தியாகத்தலைவி என பெயர் சூட்டிக்கொள்ள?. பெங்களூர் சிறையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து மரியாதை ஏன் செலுத்தவில்லை. பொன்விழா ஒற்றுமையுடன் கொண்டாடப்படுவது அவருக்கு பிடிக்கவில்லை.

நீதிமன்றம் இருக்கு.. வழக்கு தொடரலாமே.. ரெய்டு நடத்தி அவமதிக்கலாமா?..  ஜெயக்குமார் கேள்வி | Jayakumar says that they can face these cases in court  - Tamil Oneindia

சசிகலாவால் தான் 1996ம் ஆண்டு அதிமுக தோல்வியடைந்தது. வானத்திலிருந்து குதித்த அவதாரம் போல நான் தான் புரட்சித்தாய் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும். ஜெயலலிதாவைத் தவிர யாரும் புரட்சியை சொந்தம் கொண்டாட முடியாது. அவர் கட்சிக்கு எந்த புரட்சியும் செய்யவில்லை. ஒருகாலும் சசிகலாவை யாரும் ஏற்கமாட்டார்கள். ஜெயலலிதா மட்டும்தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர். அவரைத்தவிர யாரும் பொதுச்செயலாளராக முடியாது. உள்ளாட்சித்தேர்தலை பொறுத்தவரை மாநிலத்தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்து திமுக தேர்தலை நடத்தியுள்ளது”என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.