நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நான்கு பேரைக் கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் பணிகள் 21 வது நாளாக தொடர்ந்த வந்த நிலையில், தற்போது அந்தப்புலி பிடிபட்டுள்ளது.

image

கடந்த 20 நாளாக T23 புலியை உயிருடன் பிடிக்க முடியாமல் திணறிவந்தது வனத்துறை. இந்தப் புலி, நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் நான்கு பேரின் உயிர் இழப்பிற்கு காரணமாகவும், 50க்கும் மேற்பட்ட கால்நடைகளை இறப்புக்கு காரணமாகவும் உள்ளது. இதைப்பிடிக்க 2 கும்கி யானைகள், காவல்துறையின் பல மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் முதன்முறை புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இருப்பினும் புலி பிடிபடாமல் நேற்று இரவு தப்பியது. இதைத்தொடர்ந்து அந்தப் புலி நேற்று இரவு சாலையொன்றை கடப்பதை பார்த்த வனத்துறையினர், அதை பின்தொடர்ந்து 2வது மயக்க ஊசியை செலுத்தினர். இவற்றை தொடர்ந்து இன்று புலி தற்போது பிடிப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிப்பதற்காக முதல் பணிகள் துவங்கப்பட்டது. அப்போது அந்தப் புலி தேவன் எஸ்டேட் மற்றும் மேல்பீல்டு பகுதிகளில் பதுங்கி இருந்தது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக சத்தியமங்கலம் மற்றும் கோவையில் இருந்து இரு வனகால்நடை மருத்துவர்கள் மற்றும் முதுமலையில் பணியாற்றக்கூடிய வன கால்நடை மருத்துவர் என 3 பேர் கொண்ட குழு முதற்கட்டமாக ஈடுபட்டது.
இவர்களோடு கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு வனத்துறை குழுவினரும் புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டது. புலி பதுங்கி இருந்த பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தும், மரம் வெட்டும் இயந்திரங்களைக் கொண்டு சத்தம் எழுப்பி அதனை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர். மேல்பீல்டு பகுதியில் வைத்து தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் புலி புதரை விட்டு வெளியே வந்த்ம் அதை பிடிக்க வனத் துறை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக மேலும் இரண்டு வன கால்நடை மருத்துவர்கள் ஓசூர் மற்றும் தேனியிலிருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்களை கொண்டும் புலியை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தற்போது வரை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
image
இடையே புலியை சுட்டிப்பிடிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, பின் சுட்டுப்பிடிக்க வேண்டாமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர் போராட்டத்துக்குப் பின் தற்போது புலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலியை பிடிக்கும் முன்பு பேசியிருந்த தலைமை வன உயிரின காப்பாளர் நீரஜ், புலி பிடிக்கப்பட்ட பிறகு அதனை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்விக்கு, புலி உயிருடன் பிடிக்கப்பட்ட பிறகு அதன் அடுத்த கட்டம் குறித்து கால்நடை மருத்துவர்கள் தான் முடிவு செய்வார்கள் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது புலி கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.