இந்தியாவில் விரைவில் 6ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5ஜி சேவையே இந்தியாவில் வணிக ரீதியாக அறிமுகமாகாத சூழலில் 6ஜி தொழில்நுட்பம் குறித்த பேச்சு தற்போது எழுந்துள்ளது. தற்போது அதற்கான முதற்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளதாகவும். 6ஜி அறிமுகமாகும் பட்சத்தில் அதன் இணைய இணைப்பு வேகம் 5ஜியை காட்டிலும் 50 மடங்கு வேகமாக இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

தற்போது அதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டு உள்ளதாகவும் சில ரிப்போர்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான சாத்தியக் கூறுகளை தொலைத்தொடர்பு துறையினர் ஆராய்ந்து வருகின்றனராம். 

கடந்த 2019-இல் சீனா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா மாதிரியான நாடுகளில் 5ஜி சேவை வணிக ரீதியாக அறிமுகம் செய்யபபட்டது. ஆனால் இந்தியாவில் 5ஜி இன்னும் அறிமுகமாகமால் உள்ளது. இந்த நிலையில் இந்த சிக்கலை கலையும் நோக்கில் சர்வதேச அளவில் 6ஜி சேவை அறிமுகமாகும் நேரத்தில் இந்தியாவிலும் அதன் அறிமுகம் செய்வதற்காக இந்த ஆய்வு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. உத்தேசமாக உலகவலில் 6ஜி சேவை 2028 – 2030 வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

image

5ஜி vs 6ஜி!

5ஜி சேவையின் டேட்டா டவுன்லோடிங் வேகம் 20Gbps (Gigabyte per second) என உள்ளது. அதுவே 6ஜி சேவையில் 1000Gbps என டேட்டா டவுன்லோடிங் வேகம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த வேகத்தின் மூலம் 6ஜிபி அளவு உள்ள ஒரு திரைப்படத்தை 51 நொடிகளில் டவுன்லோட் செய்து விடலாம். 

ஜப்பான், பிலாந்து, தென் கொரியா, சீனா மற்றும் இந்தியா தற்போது 6ஜி வேலைகளை தொடங்கி உள்ளன. ஐரோப்பாவில் கூட மில்லியன் கணக்கிலான யூரோக்கள் இந்த 6ஜி சேவைக்காக செலவு செய்து வருகிறதாம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.