400 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கேற்ற வகையில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் சென்னையின் முக்கிய அடையாளமான சென்ட்ரல் ரயில் நிலையம், ‘சென்ட்ரல் சதுக்கம்’ என புதுக்கோலம் பூண தயாராகி வருகிறது.
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதி மற்றும் சென்னை மாநகராட்சி உதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் “கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்” அமைக்கப்பட்டு வருகிறது. 14 கோடி ரூபாய் செலவில் 5.9 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இங்கு தமிழின் முதல் எழுத்து “அ “வடிவில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் 50க்கும் மேற்பட்ட செடி வகைகளுடன் மிகப்பெரிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் அமைந்துள்ள பெரிய தூண்களில் பல்வேறு கலைஞர்கள் இணைந்து வண்ண ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்திவருகிறார்கள்.

வாகன நிறுத்தும் வசதி, பேருந்து நிறுத்தம், திறந்தவெளி உணவருந்துமிடம், 56 கடைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 42,557 சதுர அடி பரப்பளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலத்திற்கு கீழ் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடமும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்கு அழகூட்டும் இத்திட்டத்தைப்போலவே போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலான 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி வழித்தடத்தில் தற்போது சாலைகளில் தடுப்புகள் அமைத்து துளைகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 7.9 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட தூண்கள் அமைத்து மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.