தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழங்க அவரை வெல்கம் செய்தது விகடன் குழு. பறையாட்டத்துக்கு நடனமாடாத கால்கள் உண்டா என்ன? சிவாவும் குஷியாகி ஷோல்டரை ஏற்றி இறக்கி இரண்டு சின்ன ஸ்டெப் போட, ஆள் உயர ரோஜா பூ மாலையை அணிவித்து அலுவலகத்திற்குள் அழைத்து வந்தது விகடன் டீம்.

சிவகார்த்திகேயன்

“நான் நல்லா படிச்சிருந்தா இந்த மாதிரி ஆபீஸ்ல வேலைப்பார்த்திருப்பேன். நீங்க எல்லாம் குடுத்து வைச்சவங்க பாஸ்…” என அவரின் ட்ரேட் மார்க் புன்னகையோடு விகடன் ஸ்டூடியோவைத் திறந்து வைத்தார்.

“ரொம்ப நல்லா இருக்குங்க! இனி எல்லோரும் இங்கதான் வீடியோ ஷூட் பண்ணுவீங்க… சூப்பர். வாழ்த்துகள்” என்று சொன்னவருக்கு நன்றி சொல்லிவிட்டு அலுவலகத்தைச் சுற்றிக் காண்பித்தோம்.

விகடன் ஆர்கைவ்ஸ் டீம் தொடங்கி, வீடியோ எடிட்டிங் டீம், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், நாணயம் விகடன் என விகடன் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு டிபார்ட்மென்டாகச் சுற்றிக் காண்பித்தோம்.

சிவகார்த்திகேயன்

விகடன் சினிமா நிருபர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சிவாவுடன் ஏற்கெனவே பரிச்சயமிருந்ததால், அதை அவர்கள் சொன்னதும், “அட ஆமா… அப்ப பேசினோம்ல!” என அவரும் நினைவுகூர்ந்தார்.

Also Read: விகடன் அலுவலக ஸ்டூடியோவைத் திறந்துவைத்த நடிகர் சிவகார்த்திகேயன்… எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

அலுவலகத்தில் உள்ள சுவர்களில் வரையப்பட்டிருந்த கார்ட்டூன்கள், ஜோக்குகளைப் பார்த்தவர், ஒவ்வொரு ஓவியத்தையும் நிதானமாகக் கவனித்து ரசித்தார். ஓவியர் ஹாசிப்கானின் இருக்கையைப் பார்த்ததும், “கலாட்டூன் செமையா இருக்குங்க…” என்றவரிடம், “உங்க ஆட்டோகிராப் போட முடியுமா?” என ஹாசிப்கான் கேட்க, “ஓ யெஸ். தாராளமா…” என ஓவியம் வரையும் டிஜிட்டல் பேடில் `With Love SK’ எனக் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார்.

சிவகார்த்திகேயன்

விகடன் அலுவலகத்தின் மையப்பகுதியில் துறைத் தலைவர்கள் அமர்ந்திருப்பர். “இங்கதான உங்க ஆபிஸ் ஹெட்ஸ் எல்லாம் உட்கார்ந்து இருப்பாங்க…” எனச் சுற்றிப்பார்த்துக்கொண்டே யூகித்தவர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவியவர்களுக்கு ஹெச்.ஆர் டீம் சார்பாகக் கொடுக்கப்படும் `THANKQ’ பேட்ஜ் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டவர், அதை ஆவலுடன் வாங்கி அணிந்துகொண்டார்.

முதல்தள ஸ்டூடியோவுக்கு வந்தவர், ‘The Imperfect Show’ டீமுடன் இணைந்து அவர்களுடன் கலந்துரையாடினார். சினிமா விகடன் டீமுக்கு மனம் திறந்து பேட்டி கொடுத்தார். அவருக்கு சர்பரைஸ் கிஃப்ட்டாக அவரது அப்பா மற்றும் மகளுடன் இருக்கும் அவரது ஓவியத்தைப் பரிசாகக் கொடுத்ததும் அசந்துபோய்விட்டார். ஒட்டுமொத்த அலுவலகத்துக்கும் தனது பாசிட்டிவ் அதிர்வைக் கொடுத்துவிட்டு தம்ஸ்-அப் காட்டி விடைபெற்றார்.

சிவகார்த்திகேயன்

தமிழகத்தின் செல்ல `டான்’ சிவாவின் கிராப் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன். அவரது வீடும், காரும்தான் மாறியிருக்கிறதே தவிர மத்தபடி அதே சிவகார்த்திகேயனாகவே அவர் இப்போதும் இருக்கிறார். Kudos Siva!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.