மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ டெம்போ ஓட்டுனர்கள் சங்கம், மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டியுள்ளனர்.

Indian Court Suspends New Farm Laws, in Blow to Modi - The New York Times

இதையடுத்து புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோ டெம்போக்கள் இயங்காது என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல, கேரளாவில் அரசுப் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்கள் பலவற்றிலும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்களில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.