அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று ‘குளோபல் சிட்டிசன் லைவ் 2021’ நிகழ்ச்சியில் காணொலி வழியாக உரையாற்றவுள்ளார்.

குவாட் மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். நேற்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமருக்கு, ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் இன்று ‘குவாட்’ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியுள்ளார்.

‘குவாட்’ என்பது குளோபல் சிட்டிசன் என்ற அமைப்பின் சார்பில், அதீத ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க பணியாற்றும் சர்வதேச அமைப்பாகும். இந்த அமைப்பு சார்பில் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் 24 மணி நேரம் நடைபெறவிருக்கும் ‘குளோபல் சிட்டிசன் லைவ்’ இணைய நிகழ்வானது மும்பை, நியூ யார்க், பாரிஸ், ரியோ டி ஜெனிரோ, சிட்னி, லாஸ் ஏஞ்சல்ஸ், லாகோஸ் மற்றும் சியோலில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது. இப்படி உலகெங்கும் உள்ள 120 நாடுகளில் பல்வேறு சமூக வலை தளங்களின் வாயிலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது.

காணொலி கருத்தரங்கு மட்டுமன்றி, இன்றைய தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. அந்த சந்திப்பின்போது ஆப்கான், சீனா உட்பட சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை செய்தார் என சொல்லப்பட்டுள்ளது. சந்திப்புக்கு பிறகு, ‘இந்திய-அமெரிக்க உறவு சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காணும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அமெரிக்க உறவு மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஜோ பைடன் – பிரதமர் நரேந்திர மோடி இடையே முதல் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதாரம், பருவநிலை மாற்றம், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லைப்பிரச்னை குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. சந்திப்பு குறித்து பேசிய ஜோ பைடன், இந்திய – அமெரிக்க உறவு பல்வேறு சர்வதேச பிரச்னைகளுக்கும் தீர்வு காண உதவும் என நம்புவதாக தெரிவித்தார். காலநிலை மாற்றம், இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ஜோ பைடன் தலைமையில் இந்தியா – அமெரிக்கா உறவு மேலும் வலுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி: அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு : சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை

முன்னதாக இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட இருப்பதாக கூறினார். முதல் கறுப்பின பெண்ணாக அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்றிருக்கும் கமலா ஹாரிஸ் உலக மக்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவராக இருக்கிறார் என்று பிரதமர் பாராட்டினார்.

கமலா ஹாரிசுடனான சந்திப்பைத் தொடர்ந்து குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்துப் பேசினார். மோடியுடனான சந்திப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு இரவு நடைபெற்ற இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.