ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக தொழில்துறை அமைச்சரும் திமுகவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன், மாவட்ட ஊராட்சி – ஒன்றியக்குழு வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், குன்றத்தூர், திருப்பெரும்புதூர், புனித தோமையர் மலை, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம்: விதியை மீறி 100 அடி கொடிக்கம்பத்தில் வானுயர்ந்து பறக்கும் கட்சிக்கொடிகள் 

மேலும் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள் குறித்த விவரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் இந்தப் பட்டியல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.