மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் எல்.முருகன்!

எல்.முருகன்

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார். மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களைவை பதவிக்கான வேட்பாளராக எல். முருகனை அறிவித்திருக்கிறது பா.ஜ.க தலைமை. வரும் அக்டோபர் மாதம் 4 -ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் பதவியேற்றுக் கொண்டார். ராஜ்பவனில் ஆர்.என் ரவிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.பி-க்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் புத்தகங்கள் கொடுத்து புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்கிறார்!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான, ஆர்.என் ரவியை தமிழக ஆளுநராக நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ரவி

இதனை தொடர்ந்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்கிறார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலி்ன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.