குழந்தையின்மை எப்போதும் பெண் சார்ந்த பிரச்னையாகவே அணுகப்படுகிறது. மருத்துவ அறிவியலின்படி, குழந்தையின்மை என்பது 30% ஆண்களின் பிரச்னை, 30% பெண்களின் பிரச்னை, 30% இருவரும் இணைந்த பிரச்னை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கணவருக்கும் ஏதாவது பிரச்னை இருக்கும், மனைவிக்கும் ஏதாவது பிரச்னை இருக்கும். மீதம் 10 சதவிகிதம் எதிர்பாராத மலட்டுத்தன்மை (unexpected infertility) என்று கூறப்படுகிறது.

Baby (Representational Image)

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொள்வதால் குழந்தையின்மை பிரச்னை வரும் என்பது உண்மையா?

இந்த அறிவியல்பூர்வமான உண்மைகள் தெரியாமல் சமுதாயத்தின் கேலி, கிண்டல்கள், விமர்சனங்கள் அனைத்தும் பெண்களை நோக்கியே பாய்கின்றன. குழந்தையின்மை என்பது ஆண்,பெண் இருவருக்கும் மிகப்பெரிய மனஅழுத்தத்தைக் கொடுக்கும்.

மாதவிடாய் சுழற்சி சரியாக இருந்து, தினமும் தாம்பத்யத்தில் ஈடுபட்டால்கூட 100 பேரில் 15 பேர்தான் கர்ப்பம் தரிப்பார்கள். இது இயற்கை. அதாவது ஒரு மாதவிடாய் சுழற்சியின் வெற்றி விகிதம் அவ்வளவுதான். எனவே குழந்தையின்மை சார்ந்து பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் தம்பதிகளுக்கு அவசியமாகின்றன.

Pregnancy

குழந்தைப்பேறு தொடர்பான தெளிவையும் சந்தேகங்களுக்குத் தீர்வையும் அளிப்பதற்காக அவள் விகடன் மற்றும் Oasis Fertility மருத்துவமனை இணைந்து `குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான தீர்வு’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

மருத்துவமனையின் மூத்த குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் வசுந்தரா ஜெகன்நாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று தம்பதிகளுக்கான ஆலோசனைகளை வழங்குவார். குழந்தையின்மைக்கான காரணங்கள், தீர்வுகள், பின்பற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனைகளை வழங்குவார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பார்.

குழந்தையின்மை குறித்த வெபினார்

Also Read: குழந்தைகளைத் துன்புறுத்தும் அம்மாக்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல… அவர்கள் கிரிமினல்கள்!

ஆண், பெண், தம்பதிகள் என அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் இந்நிகழ்ச்சி செப்டம்பர் 18-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 முதல் 5.30 மணி ஆன்லைனில் நடைபெறும். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.