இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!” என கமல்ஹாசன் ஆவேசத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி கல்லூரியில் நேற்று மதியம் 2மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிய காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டனர். வினாத்தாளை கசியவிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ராம் சிங் கூறுகையில்,’எனது நண்பர் நவரத்னா என்பவர் பன்சூரில் கல்வி மையம் நடத்தி வருகிறார். அவருடைய நண்பர் அனில் யாதவ் இ-மித்ரா நடத்தி வருகிறார்.

image

அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த சுனில் யாதவின் உறவினர்தான் தனேஷ்வரி. அவருடைய தேர்வு மையம் தான் ராஜஸ்தான் இன்ஸ்டிடியூர் ஆஃப் இன்ஜினியரிங். இதனிடையே நாங்கள் நீட் வினாத்தாளை 35 லட்சத்துக்கு விற்பது என முடிவெடுத்தோம். அதன்படி, வினாத்தாள் தேர்வு மையத்துக்கு வந்ததும் அதனை மொபைலில் புகைப்படம் எடுத்து விற்பனை செய்ய முயன்றோம். இதற்காக, ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்துடன் தனேஷ்வரியின் உறவினர் தேர்வு மையத்துக்கு வெளியே காரில் அமர்ந்திருந்தார். பிறகு காவலர்களால் அவரும் கைது செய்யப்பட்டார்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.