காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் 1941-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிறந்தவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ். 1972-ம் ஆண்டு உடுப்பி மாநகராட்சி கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1980-ம் ஆண்டு உடுப்பி மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வானார்.இதையடுத்து, 1984,1989,1991, 1996 என லோக்சபா தேர்தல்களிலும் உடுப்பியில் போட்டியிட்டு வென்றார்.

image

உடுப்பியில் மொத்தம் 5 முறை ஒரே தொகுதியில் வென்று எம்.பி.யானவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ். 2004-2009 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். சோனியா காந்தி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமான இவர், நேரு குடும்பத்தால் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.