மாரிகோவை விற்க ஹெச்.யூ.எல் நெருக்கடி கொடுத்தது என ஹரிஷ் மரிவாலா தெரிவித்தார்.
Fast Moving Consumer Goods துறையில் உள்ள முக்கிய நிறுவனம் மாரிகோ. இந்த நிறுவனத்தின் வசம் பல பிராண்ட்கள் இருந்தாலும் பாரசூட் என்பது முக்கியமான பிராண்ட். இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு மற்றொரு முக்கிய நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் பல வகைகளில் நெருக்கடி கொடுத்ததாக மாரிகோ நிறுவனத்தின் தலைவர் ஹரிஷ் மரிவாலா தெரிவித்திருக்கிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கும் இவர் இந்த பதிவினை செய்திருக்கிறார். நீண்ட சிந்தனைக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறேன். சமீபத்தில் எழுதிய Harsh Realities என்னும் புத்தகத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
60 ஆண்டுகளுக்கு மேலே உழைத்ததில் பல வெற்றிகள், பல தோல்விகள் பல பாடங்களை நான் கற்றிருக்கிறேன்.இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து புத்தகமாக எழுதி இருக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.
View this post on Instagram
மேலும் முதல் `ரீல்ஸ்’ வீடியோவில், போட்டியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் பேசி இருக்கிறார். ஹெச்.யூ.எல். நிறுவனத்திடம் இருந்து மிரட்டல் போன் வந்தது. மேலும் ஹெச்.யூ.எல். நிறுவனத்திடம் பலமான நெட்வொர்க் இருந்தது என குறிப்பிட்டிருக்கிறார். ஹெச்.யூ.எல் நிறுவனம் மிரட்டியது என வெளிப்படையாக பேசியது தொழில் உலகின் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM