ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உடனடியாக இவரது ராஜினாமா அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இயக்குநர் குழுவின் ஆலோசகராக ஷிவ் நாடார் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஷிவ் நாடார் பதவி விலகலை தொடர்ந்து தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் நிர்வாக இயக்குநராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20-ம் தேதி முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பில் விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகினார். அந்த பொறுப்பில் கடந்த ஓர் ஆண்டாக இவரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
image
1976-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் ஷிவ் நாடார் இந்த நிறுவனத்தை தொடங்கினார். 45 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். தொழில்நுட்பத் துறையில் பல முன்னெடுப்புகளை ஹெச்.சி.எல். செய்திருக்கிறது.
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்க்கு தேவையான மென்பொருளை ஹெச்.சி.எல். வடிவமைத்தது. தற்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமாக ஹெச்.சி.எல். திகழ்கிறது.
 
ஹெச்.சிஎல் நிறுவனத்தில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளை ஷிவ் நாடார் வைத்திருக்கிறார். இதுதவிர ஐபிஎம் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி வனிதா நாராயணன் ஹெச்சிஎல் இயக்குநர் குழுவில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.