எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் எப்போதுமே லெஜென்டுகளை மட்டும்தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பெயரை கேட்டாலே விசில் சத்தம் பறக்கும். அவர் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இந்த இனிய தருணத்தில் கிரிக்கெட் உலகில் தோனி படைத்துள்ள அசைக்க முடியாத சாதனைகள் குறித்து பார்க்கலாம்.

image

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளுக்கு கேப்டன் 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உள்ளார். அதில் 178 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 324 சர்வதேச போட்டிகளில் தனது அணியை கேப்டனாக வழி நடத்தி உள்ளார். 

image

ஐசிசியின் மூன்று பிரதான தொடர்களை வென்ற கேப்டன்!

தோனி 2007 டி20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய மூன்று பிரதான தொடர்களில் இந்தியாவை சாம்பியன் பட்டம் வெல்ல செய்துள்ளார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். அதோடு பத்து ஐசிசி தொடர்களில் இந்தியாவை வழி நடத்தி உள்ளார். 

அதிக ரன்களை பதிவு செய்துள்ள இந்திய விக்கெட் கீப்பர்

சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை பதிவு செய்துள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 2005இல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுட்டாகாமல் 183 ரன்களை குவித்தார் தோனி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும். அதோடு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்களிலும் இது அடங்கும். 2013இல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 224 ரன்களை குவித்தார் தோனி. இதுவே இதுநாள் வரையில் டெஸ்ட் அரங்கில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பதிவு செய்துள்ள அதிகபட்ச ரன்களாகும். 

image

ஒருநாள் கிரிக்கெட்டின் நாட்-அவுட் பேட்ஸ்மேன்

ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்று அதன் மூலம் வெற்றி தேடி தருவதில் தோனி வல்லவர். அதனாலேயே அவர் சிறந்த பினிஷர் என அழைக்கப்படுகிறார். தோனி பேட் செய்து விளையாடிய 297 ஒருநாள் இன்னிங்ஸில் 84 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். குறிப்பாக ரன்களை விரட்டும் போது தோனி 51 முறை நாட்-அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் விளையாடி உள்ளார். அதில் 49 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. அதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸில் நாட்-அவுட் பேட்ஸ்மேனாக விளையாடிய வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

image

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர்

மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் வித்தையில் கைதேர்ந்தவர் தோனி. அனைத்து பார்மெட் கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து தோனி மொத்தமாக 195 ஸ்டம்பிங்கை செய்துள்ளார். இதோடு சர்வதேச கிரிக்கெட்டில் ஆறாவது மற்றும் அதற்கும் கீழான பேட்டிங் ஆர்டரில் களம் இறங்கி சர்வதேச கிரிக்கெட்டில் 10268 ரன்களை குவித்துள்ள ஒரே பேட்ஸ்மேன் தோனிதான். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.