ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிபரப்பி வந்த மதனின் 2 யூடியூப் சேனல் முடக்கம் செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை. 

பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிபரப்பி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பப்ஜி  மதன். இவர் Madan, Toxic Madan 18+, PUBG Madan Girl Fan, Richie Gaming YT என மொத்தம் நான்கு யூடியூப் சேனல்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மதன் யூடியூப் சேனலில் அதிகப்படியாக 7 லட்சத்திற்கும் அதிக பார்வையாளர்களும், இதர சேனல்களில் 2 லட்ச பார்வையாளர்கள் இருந்து வந்தது 

தொடர்ந்து பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி சேனலில் வீடியோ வெளியிட்டு வந்த மதன் மீது கண்டனங்கள் கிளம்பியது. இதனையடுத்து மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் வந்தது. புகாரின்  அடிப்படையில் மதன் மீது  4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். நீண்ட நாட்களாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தலைமறைவாக இருந்த மதனை தர்மபுரியில் வைத்து கடந்த 18ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

image

இதற்கு முன்பு மதனின் மனைவியான கிருத்திகாவை பிடித்து விசாரித்த போது சேனலுக்கு அட்மினாக இருந்தது தெரியவந்ததையடுத்து கிருத்திகாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மதனின் யூடியூப் சேனலை முடக்ககோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் ஆபாசங்கள் நிறைந்த 7லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட மதன் யூடுப் சேனல் மற்றும் டாக்ஸிக் மதன் 18+ யூடியூப் சேனல் என 2 சேனல்களையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.  மீதமுள்ள இரு சேனலையும் முடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. யூடுப் நிறுவனம் சேனல்களை இதுவரை முடக்காததால் சைபர் கிரைம் போலீசாரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

image

மதன் மற்றும் மனைவி கிருத்திகாவை ஒரே நாளில் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மாணவர்களுக்கு அறிவுரையை வழங்கி உள்ளனர். முடக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் 2 யூடுப் சேனல்களிலும் அந்த கருத்தை பதிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.